செய்திகள்
ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரை

கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் 34 லட்சம் மாத்திரைகள் நன்கொடை - அமெரிக்கவாழ் இந்தியர் தாராளம்

Published On 2020-04-09 09:15 GMT   |   Update On 2020-04-09 09:15 GMT
அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக், சிந்து படேல் ஆகியோருக்கு சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனம், 34 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கேட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் சிராக், சிந்து படேல் ஆகியோருக்கு சொந்தமான ‘அம்னீல் பார்மசூட்டிக்கல்ஸ்’ மருந்து உற்பத்தி நிறுவனம், 34 லட்சம் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்துக்கு 20 லட்சம் மாத்திரைகளும், டெக்சாஸ் மாகாணத்துக்கு 10 லட்சம் மாத்திரைகளும் வழங்கி உள்ளது. லூசியானா மாகாணத்துக்கு 4 லட்சம் மாத்திரை வழங்கப்போவதாக கூறியுள்ளது.

மேலும், தனது ஆலைகள் மூலம் ஒரு வாரத்துக்குள் 2 கோடி மாத்திரைகள் உற்பத்தி செய்து, விற்பனைக்கு கொண்டு வருவோம் என்று சிராக், சிந்து படேல் தெரிவித்தனர்.
Tags:    

Similar News