செய்திகள்
பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி

ராமாயணத்தை மேற்கோள் காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

Published On 2020-04-08 14:13 GMT   |   Update On 2020-04-08 14:13 GMT
ராமாயணத்தில் உள்ள சஞ்சீவி மூலிகைபோல், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.
பிரேசிலியா:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்நிலையில், ராமாயணத்தில் உள்ள சஞ்சீவி மூலிகைபோல், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:  

கடவுள் ராமரின் சகோதரரான லட்சுமணரைக் காப்பாற்ற கடவுள் அனுமன் இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகை எனும் புனித மருந்தை எடுத்து வந்தார்.

தற்போது கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும உலகளாவிய பிரச்சினையை இந்தியாவும், பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும்.

அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும். ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News