செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா அச்சுறுத்தல் - சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்.30 வரை நீடித்தது நேபாளம்

Published On 2020-04-07 13:00 GMT   |   Update On 2020-04-07 13:00 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நேபாள அரசு சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
காத்மண்டு:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.5  லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இதற்கிடையே, கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை நாடான நேபாளம் உள்ளூர் விமான சேவைக்கு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் உலகையே தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், நேபாள அரசு சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
Tags:    

Similar News