செய்திகள்
டொனால்ட் டிரம்ப்

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிப்பு- டிரம்ப்

Published On 2020-04-07 05:46 GMT   |   Update On 2020-04-07 05:46 GMT
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும், தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் இதனை சரி செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையில் இதே நிலை நீடித்தால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது கணிசமாக வரிவிதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கச்சா எண்ணெய் விலை இப்படியே இருந்தால் கணிசமான வரிவிதிப்பை அமல்படுத்துவேன். ஏனென்றால் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம். எங்களிடம் எங்கள் சொந்த எண்ணெய் இருக்கிறது. நான் வரிவிதிப்பை அமல்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு எண்ணெயை நாங்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்த முடியும். அமெரிக்க எரிசக்தி துறையை பாதுகாப்பதற்கு இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அத்தியாவசியமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News