செய்திகள்
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்?

Published On 2020-04-06 22:03 GMT   |   Update On 2020-04-06 22:03 GMT
ஜப்பானில் இன்று முதல் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோக்கியோ:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. 202 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 13 லட்சத்து 30 ஆயிரத்து 569 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 73 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 77 ஆயிரத்து 855 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 3 ஆயிரத்து 654 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஜப்பான் முழுவதும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளது. 

இது குறித்து நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே ,'' ஏப்ரல் 7 முதல் (இன்று) தேசிய அவரசி நிலையை பிரகடனம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். ஆனால், மற்ற நாடுகளை போல் இல்லாமல் ஜப்பானில் தேசிய அவசர நிலை காலத்திலும் மாகாணங்களில் எல்லைகள் மூடப்படாது’’ என்றார். 
Tags:    

Similar News