செய்திகள்
வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் காட்சி

12 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

Published On 2020-04-05 00:16 GMT   |   Update On 2020-04-05 00:16 GMT
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஜெனிவா:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. 

உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 319 ஆக அதிகரித்துள்ளது. 



வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64 ஆயிரத்து 667 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெறுபவர்களில் 42 ஆயிரத்து 324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.   





Tags:    

Similar News