செய்திகள்
கோப்புபடம்

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-04 06:53 GMT   |   Update On 2020-04-04 06:53 GMT
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இன்னும் நிறைய மாலுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தாக்கி இருக்கக்கூடும்.

இருப்பினும், யாரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கக்கூடிய அளவுக்கு இல்லை. எல்லோரும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடனோ, அது கூட இல்லாமலோதான் இருக்கின்றனர். சிலர் குணமடைந்து விட்டனர். பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதற்காக, இந்த கப்பலின் தலைமை அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News