செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது

Published On 2020-04-04 04:47 GMT   |   Update On 2020-04-04 04:47 GMT
கொரோனா வைரசானது பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் அவரது மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்களின் தலைவரான அந்தோனி பவுசி கூறியதாவது:-

இருமல் மற்றும் தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட வைரஸ் உண்மையில் பரவக்கூடும் என்ற சில சமீபத்திய தகவல்கள் காரணமாக அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த பரிந்துரைக்க அரசாங்கம் தயாராக உள்ளது. முகமூடிகள் குறித்த வழிகாட்டுதல் மாற்றப்படும்.

முக்கிய ஆலோசனை என்னவென்றால், நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே தங்கள் முகங்களை மறைக்க வேண்டும், அதே போல் அவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க சுகாதார நிறுவனங்கள் கூறும்போது:-



கொரோனா பரவுவதற்கான முதன்மை பாதை சுவாச துளிகளாகும், நோய்வாய்ப்பட்ட மக்களால் சுமார் ஒரு மில்லிமீட்டர் விட்டம் கொண்டவை, தும்மும்போது அல்லது இருமும்போது வெளியேற்றப்படுகிறது. ஆனால் ஒருவரின் சுவாசத்தின் மூலமும் பரவக்கூடும். ஆராய்ச்சி இன்னும் முடிவாக இல்லை என்றாலும், "கிடைக்கக்கூடிய ஆய்வுகளின் முடிவுகள் சாதாரண சுவாசத்திலிருந்து வைரஸின் பரவுதல் ஒத்துப்போகின்றன என கூறி உள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் சமீபத்தில் வெளியிடப்பட்ட என்ஐஎச் நிதியுதவி ஆய்வு அறிக்கையில்  சார்ஸ், கோவ் -2  வைரஸ் ஒரு தூசுப்படலமாக மாறி மூன்று மணி நேரம் வரை காற்றில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News