செய்திகள்
மருத்துவ ஆய்வு

ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தால் கொரோனா வைரசை அழிக்க முடியும்- மருத்துவ ஆய்வில் தகவல்

Published On 2020-04-04 04:08 GMT   |   Update On 2020-04-04 04:08 GMT
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெல்போர்ன்:

கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தானது, சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் விஞ்ஞானி கெய்லி வாக்ஸ்டாப் கூறியதாவயது:-

இந்த மருந்தின் ஒரு டோஸ் மூலம், அனைத்து வைரஸ் ஆர்என்ஏ மூலக்கூறுகளையும் முழுமையாக 48 மணி நேரத்திற்குள் அகற்ற முடியும் என்பதையும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதையும் நாங்கள் கண்டறிந்தோம் 

வைரசில் ஐவர்மெக்டின் மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கும்.

நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கிறோம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை. இவ்வாறான காலங்களில், உலகெங்கிலும் ஏற்கனவே கிடைத்த ஒரு மருந்து கலவை எங்களிடம் இருந்தால், அது விரைவில் மக்களுக்கு உதவக்கூடும்

தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து அடுத்த கட்டமாக இந்த மருந்து மனிதர்களுக்கு கொடுக்க தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் உடலுக்கு எந்த அளவு மருத்து பாதுகாப்பான ஆராயப்பட்டு வருகின்றது. 

ஐவர்மெக்டின் என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது எச்.ஐ.வி தொற்று, டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது என கூறப்படுகின்றது.
Tags:    

Similar News