செய்திகள்
கொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது: துர்க்மேனிஸ்தான்

கொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது: துர்க்மேனிஸ்தானில் அதிரடி

Published On 2020-04-02 12:43 GMT   |   Update On 2020-04-02 12:43 GMT
அருகில் உள்ள ஈரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது என்று துர்க்மேனிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
உலகையே கொரோனா வைரஸ் உலுக்கி வரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளும் இதற்குத் தப்பவில்லை. மத்திய பசுபிக் கடலில் உள்ள குட்டி தீவு நாடுகளில் ஒன்றான துர்க்மேனிஸ்தானில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை.

கொரோனா என்றாலே உலக மக்கள் நடுங்கும் நிலையில், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அந்த வார்த்தையை பயன்படுத்தினால் கைது நடவடிக்கை பாயும் என்றும் அறிவித்து இருக்கிறது.

மேலும் ஊடகங்கள், பத்திரிகைகள் உள்ளிட்டவையும் கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் சாலைகளில் அல்லது வேறு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து யாராவது சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அரசு எச்சரித்துள்ளது.

துர்க்மேனிஸ்தானின் அண்டை நாடான ஈரானில் கொரோனா தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ் அரசாங்கம் சர்வாதிக்கத்தை இதன் மூலம் வலுப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன.

ஊடக சுதந்திர தரவரிசையில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் துர்க்மேனிஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசி இடத்தில் வடகொரியா இருக்கிறது.
Tags:    

Similar News