செய்திகள்
அதிவேகமாக சென்ற கார் (கோப்புப்படம்)

அமெரிக்காவில் கார் ஓட்ட நாய்க்கு பயிற்சி அளித்த வாலிபர் - விபத்தை ஏற்படுத்தியதால் கைது

Published On 2020-04-02 07:15 GMT   |   Update On 2020-04-02 07:15 GMT
அமெரிக்காவில் கார் ஓட்ட நாய்க்கு பயிற்சி அளித்த நபரை கைது செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் உள்ள ஒரு சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது. அந்த கார் சாலையில் முன்னால் சென்ற 2 கார்கள் மீது 

மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டி சென்றனர். குறிப்பிட தூரம் சென்ற பிறகு அந்த காரை போலீசார் சுற்றிவளைத்தனர். பின்னர் 

போலீசார் அந்த காரின் கதவை திறந்து பார்த்தபோது, டிரைவரின் இருக்கையில் நாய் அமர்ந்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்து போயினர்.

டிரைவரின் இருக்கையின் அருகே இருந்த மற்றொரு இருக்கையில் வாலிபர் ஒருவர் இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் தனது நாய்க்கு கார் ஓட்ட பயிற்சி 

அளித்ததாக கூறி போலீசாரை அதிரவைத்தார். அதனை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தியது மற்றும் காரை அதிவேகத்தில் ஓட்டியதாக கூறி அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News