செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது- 2 டிரில்லியன் டாலர் நிவாரண தொகுப்பு

Published On 2020-03-28 04:18 GMT   |   Update On 2020-03-28 04:18 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை உலகமெங்கும் கொரோனாவால் 27 ஆயிரத்து 231 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பானது ஐரோப்பிய நாடுகளை மையம் கொண்டுள்ளது. இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து பல நாடுகளில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் 65 ஆயிரத்து 719 பேர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 773 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலும் 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் சிகிச்சை பலனின்றி 299 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு 14 ஆயிரத்து 543 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 181 பேர் உயிரிழந்தனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு 1,02,325 பேர் இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 296 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 591 என அதிகரித்துள்ளது.

சராசரி அமெரிக்க குடும்பங்கள் மற்றும் வணிகங்களை கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார கஷ்டங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 டிரில்லியன் டாலர் அவசர செலவு மசோதா சட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளார்.
Tags:    

Similar News