செய்திகள்
நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி

கொரோனா வைரசால் திணறும் உலக நாடுகள்- 24 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

Published On 2020-03-27 02:52 GMT   |   Update On 2020-03-27 02:52 GMT
கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனிவா:

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

இத்தாலி - 8,215
சீனா - 3,292
அமெரிக்கா - 1,295
ஸ்பெயின் - 4,365
ஜெர்மனி - 267
ஈரான் - 2,234
பிரான்ஸ் - 1,696
சுவிட்சர்லாந்து  - 192
தென்கொரியா - 131
பிரிட்டன் - 578
நெதர்லாந்து - 434
ஆஸ்திரியா - 49
பெல்ஜியம் - 220
கனடா - 39
துருக்கி - 75
போர்ச்சுக்கல் - 60
பிரேசில் - 77
ஸ்வீடன் - 77
டென்மார்க் - 41
ஈக்வடார் - 34
ஜப்பான் - 47
இந்தோனேசியா - 78
பிலிப்பைன்ஸ் - 45
எகிப்து - 24
ஈராக் - 36
அல்ஜீரியா - 25.
Tags:    

Similar News