செய்திகள்
கொரோனா பாதிக்கப்பட்ட நபரை கொண்டு செல்லும் காட்சி

23 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்

Published On 2020-03-26 20:54 GMT   |   Update On 2020-03-26 20:54 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.
ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 77 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 322 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

சீனா - 3,286
இத்தாலி - 8,215
அமெரிக்கா - 1,163
ஸ்பெயின் - 4,145
ஜெர்மனி - 262
ஈரான் - 2,234
பிரான்ஸ் - 1,696
சுவிஸ்சர்லாந்து  - 191
தென்கொரியா - 131
இங்கிலாந்து - 578
நெதர்லாந்து - 434
பெல்ஜியம் - 220
ஜப்பான் - 47
பிரேசில் - 77
கிரீஸ் - 26
இந்தோனேசியா - 78
பிலிப்பைன்ஸ் - 45
ஈராக் - 36
ஸ்வீடன் - 71
பொர்ச்சீகல் - 60
ஆஸ்திரியா - 49
கனடா - 37
டென்மார்க் - 41
துருக்கி - 75
ஈக்வடார் - 34
எகிப்து - 21
அல்ஜீரியா - 25
Tags:    

Similar News