செய்திகள்
கொரோனா சிறப்பு சிகிச்சை பகுதி

24 மணி நேரத்தில் 1395 பேர் உயிரிழப்பு: உலகம் முழுவதும் கொரோனா பலி 15 ஆயிரத்தை கடந்தது

Published On 2020-03-23 12:17 GMT   |   Update On 2020-03-23 12:17 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது.
பாரிஸ்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


 
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மாலை நிலவரப்படி 15 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் மூன்றரை லட்சம் மக்களைஇந்த கொடிய வைரஸ் தாக்கியுள்ளது.

இத்தாலியில் இதுவரை 5 ஆயிரத்து 476 பேரும், சீனாவில் 3 ஆயிரத்து 270 பேரும், ஸ்பெயின் நாட்டில் 2 ஆயிரத்து 182 பேரும், ஈரானில் ஆயிரத்து 812 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 
Tags:    

Similar News