செய்திகள்
நைஜீரிய ராணுவம் (கோப்பு படம்)

நைஜீரியா: ராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் பலி

Published On 2020-03-22 03:08 GMT   |   Update On 2020-03-22 03:08 GMT
நைஜீரியாவில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
அபுஜா:

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. 

இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கட்சினா மற்றும் சம்பரா மாகாணங்களில் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News