செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இந்தியாவில் எங்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்தது - மோடியை சந்தித்தது குறித்து டிரம்ப் பாராட்டு

Published On 2020-03-14 20:34 GMT   |   Update On 2020-03-14 20:34 GMT
இந்தியாவில் எங்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்ததாகவும், அந்த 2 நாட்களும் வியக்கத்தக்கதாக இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார் .
வா‌ஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலானியா மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த மாதம் 24, 25-ந் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வெள்ளை மாளிகையில் நேற்று அவர் பேட்டி அளித்தபோது, ஒரு நிருபர் இந்திய பயணம் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு டிரம்ப் கூறியதாவது:-



இந்தியாவில் எங்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்தது. அந்த 2 நாட்களும் வியக்கத்தக்கதாக இருந்தது. மோடி எனது மிகச்சிறந்த நண்பர். அவர் அந்த நாட்டு மக்களின் நண்பராகவும் இருக்கிறார். அதனால் அவரை வியக்கத்தக்க அன்புடன் வரவேற்றார்கள். அப்போது நான் அந்த மைதானத்தில் இருந்தேன். அது ஒரு நம்பமுடியாத நிகழ்ச்சி. அவருடன் இருந்த என்னையும் அன்பு பாராட்டினார்கள்.

நாங்கள் அனைத்து வி‌‌ஷயங்கள் குறித்தும் பேசினோம். எல்லைகளை கடந்து நாங்கள் பேசினோம். இந்த பயணத்தின்போது இந்திய ராணுவத்துக்காக 30 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.
Tags:    

Similar News