செய்திகள்
ஆப்பிள் நிறுவனம்

கொரோனா வைரஸ் பரவல் - ‘ஆப்பிள்’ நிறுவனம் மூடல்

Published On 2020-03-14 18:51 GMT   |   Update On 2020-03-14 18:51 GMT
கொரோனா வைரஸ் நோய் பரவலை தொடர்ந்து சீனாவுக்கு வெளியே உலகம் முழுவதும் உள்ள தனது நிறுவனங்களை வருகிற 27-ந்தேதி வரை மூடுவதாக ஆப்பில் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது.

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற ‘ஆப்பிள்’ கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை நிர்வகித்து வருகிறது.

தற்போது உலகில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் நோய் பரவலை தொடர்ந்து சீனாவுக்கு வெளியே உலகம் முழுவதும் உள்ள தனது நிறுவனங்களை வருகிற 27-ந்தேதி வரை மூட உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி டிம் கூக் அறிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News