செய்திகள்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

கொரோனாவை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

Published On 2020-03-14 15:24 GMT   |   Update On 2020-03-14 15:24 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி சார்க் கூட்டமைப்பு தலைவர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதிலளித்துள்ளார். அதில், சார்க் நாடுகளின் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக, சகோதரத்துவ நாடு என்ற வகையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு எடுத்து வருகிறது. வீணான வதந்திகளை கேட்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

Similar News