செய்திகள்
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ

டிரம்பின் பயணம் ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ -அமெரிக்க மந்திரி கருத்து

Published On 2020-02-28 20:47 GMT   |   Update On 2020-02-28 20:47 GMT
டிரம்பின் இந்திய பயணம் ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
வா‌ஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவில் முதல்முறையாக கடந்த 24, 25-ந்தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பி உள்ளார்.

இந்த பயணத்தை டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார்.



இந்த நிலையில் டிரம்பின் இந்திய பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணமானது, அமெரிக்க, இந்திய கூட்டாண்மைக்கு அமெரிக்கா அளிக்கிற மதிப்பை நிரூபிக்கிறது’’ என கூறி உள்ளார்.

மேலும், ‘‘ஜனநாயக மரபுகள் நம்மை இணைக்கிறது. இரு தரப்பு நலன்கள் நம்மை பிணைக்கிறது. ஜனாதிபதி டிரம்பின் தலைமையின்கீழ் இந்தியா உடனான உறவு இன்னும் வலுவாக வளரும்’’ எனவும் கூறி உள்ளார்.
Tags:    

Similar News