செய்திகள்
கோப்பு படம்

துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய அரசுப்படையினர் 9 பேர் பலி

Published On 2020-02-25 00:39 GMT   |   Update On 2020-02-25 00:39 GMT
இட்லிப் மாகாணத்தில் துருக்கிப் படைகள் நடத்திய தாக்குதலில் சிரிய அரசுப்படையினர் 9 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். 

மேலும், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது.

இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்து வைத்துள்ளது. 

இதனால் உள்நாட்டில் தொடங்கிய இப்போர் தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கியின் இந்த நடவடிக்கையால் ரஷியா மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும், தங்கள் நாட்டு எல்லைகளை பாதுகாக்க போராடிவரும் சிரிய படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் இட்லிப் மாகாணம் நைரொப் மற்றும் நய்ரப் பகுதிகளில் இன்று துருக்கி படைகள் திடீரென குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிரிய அரசுப்படையினர் 9 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில் சிரிய அரசுப்படையினருக்கும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று நடைபெற்ற மோதலில் 94 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News