செய்திகள்
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்கும் சுகாதார ஊழியர்கள்

சீனாவைத் தொடர்ந்து தென் கொரியாவில் தீவிரமாக பரவும் கொரோனா- இதுவரை 7 பேர் பலி

Published On 2020-02-24 03:39 GMT   |   Update On 2020-02-24 03:39 GMT
சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தென்கொரியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.
சியோல்:

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் அதிவேகமுடன் பரவ தொடங்கியுள்ளது. நேற்று 123 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதனால் தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 556 ஆக உயர்ந்திருந்தது.

தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். இன்று 161 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.  இதனால் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை 'ரெட் அலர்ட்' ஆக உயர்த்தியுள்ளது.
Tags:    

Similar News