செய்திகள்
கொரோனா வைரஸ்

ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 4 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Published On 2020-02-23 10:06 GMT   |   Update On 2020-02-23 10:06 GMT
ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்த மேலும் 4 இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ:

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்குச் 3 ஆயிரத்து 711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த 132 ஊழியர்களும், 6 பயணிகளும் இருந்தனர். கப்பலில் இருந்த பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததால் அவர்களை கப்பலில் இருந்து இறக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் இந்தியர்கள் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சொகுசு கப்பலில் இருந்த மேலும் 4 இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய தூதரகம் உறுதிபடுத்தி உள்ளது.

இதன் மூலம் சொகுசு கப்பலில் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் சார்பில் டுவிட்டரில் கூறும்போது, ‘துரதிஷ்ட வசமாக சொகுசு கப்பலில் மேலும் 4 இந்திய ஊழியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 12 இந்தியர்களும் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்’ என்று கூறியுள்ளது.

சொகுசு கப்பலில் வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்கள் கப்பலில் உள்ளனர்.

Tags:    

Similar News