செய்திகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா- சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு

Published On 2020-02-21 04:23 GMT   |   Update On 2020-02-21 04:23 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 118 பேர் இறந்துள்ளனர்.
பீஜிங்:

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில் சீனாவில் மேலும் 118 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். 



ஒட்டு மொத்தமாக 75 ஆயிரத்து 465 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 889 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று 18,264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News