செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி

சீனாவில் கொரோனா வைரஸ் பலி 2 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-02-19 03:54 GMT   |   Update On 2020-02-19 03:54 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் ஹுபெய் மாகாணத்தில் 132 பேர் இறந்துள்ளனர்.
பீஜிங்:

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. 

நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 136 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக ஹுபெய் மாகாணத்தில் 132 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.



ஒட்டு மொத்தமாக 74 ஆயிரத்து 185 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 1749 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 236 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 11 ஆயிரத்து 977 பேர் மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று 1824 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
Tags:    

Similar News