செய்திகள்
காய்கறிகள் நிரப்பப்பட்ட கன்டெய்னர்

பாகிஸ்தானில் வி‌‌ஷ வாயு தாக்கி 5 பேர் பலி

Published On 2020-02-17 20:08 GMT   |   Update On 2020-02-17 20:08 GMT
பாகிஸ்தானில் கன்டெய்னரில் இருந்த வி‌‌ஷ வாயு தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கராச்சி:

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்கு கப்பல் ஒன்று வந்தது. அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரப்பப்பட்ட கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கினர். பின்னர் அந்த கன்டெய்னர் அருகில் உள்ள சந்தைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு காய்கறிகளை தரம் பிரித்து, கடைகளுக்கு கொடுப்பதற்காக ஊழியர்கள் கன்டெய்னரை திறந்தனர்.

அப்போது கன்டெய்னரில் இருந்து வி‌‌ஷ வாயு வெளியேறியது. வி‌‌ஷ வாயு தாக்கியதில் சுமார் 30 பேர் மூச்சு திணறலுக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தனர். அவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்குகொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News