செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி

பேஸ்புக்கில் முதல் இடம் யாருக்கு? - டுவிட்டரில் டிரம்ப் தகவல்

Published On 2020-02-15 20:53 GMT   |   Update On 2020-02-15 20:53 GMT
இணையதளவாசிகளால் பேஸ்புக்கில் முதல் இடம் யாருக்கு என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

உலக அளவில் பெரும்பான்மையான இணையதளவாசிகளால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கில் முதலிடத்தில் இருப்பது டிரம்ப் என்றும் அவருக்கு அடுத்தப்படியாக பிரதமர் மோடி இரண்டாம் இடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் முதல் இடம், இரண்டாம் இடம் இந்திய பிரதமர் மோடிக்கு என்று சமீபத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் கூறி இருக்கிறார்.  இதை மிகப்பெரிய கவுரவம் என்று கருதுகிறேன். இன்னும் 2 வாரங்களில் நான் இந்தியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் சுவிஸ் நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த பொருளாதார பேரவை உச்சிமாநாட்டின் இடையே சி.என்.பி.சி. டி.வி. சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டியின்போதும் இந்த தகவலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News