செய்திகள்
கோப்பு படம்

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி

Published On 2020-02-12 20:30 GMT   |   Update On 2020-02-12 20:30 GMT
நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
கனோ:

நைஜீரியாவின் போகோஹராம் பயங்கரவாத அமைப்பு பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. 

இந்த பயங்கரவாத அமைப்பு கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு தீவைத்தும், உணவு பொருட்களை கொள்ளையடித்தும் அட்டுழியத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டின் கடுனா மாகாணம் ஃபிகா மாவட்டம் பகழி கிராமத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு வசித்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேரை துப்பாக்கி முனையில் ஒரு வீட்டிற்குள் வைத்து அடைத்தனர். 

பின்னர் அவர்களுடன் சேர்த்து வீட்டை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 16 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News