செய்திகள்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல்

இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் - சுவிட்சர்லாந்து நாட்டில் பியூஸ் கோயல் பேச்சு

Published On 2020-01-24 01:17 GMT   |   Update On 2020-01-24 01:17 GMT
இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் என்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பியூஸ் கோயல் பேசினார்.
டாவோஸ்:

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், இந்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் திறன் படைத்தது. இந்தியாவில் முதலீடு செய்ய பெரும் ஆர்வம் நிலவி வருகிறது.

நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள், இனிவரும் ஆண்டுகளில், தங்கள் மொத்த பணியாட்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் இந்தியாவில் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தன.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

‘ஆர்செப்’ எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஏற்றத்தாழ்வு கொண்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பு, அது தொடங் கப்பட்டபோது உருவாக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகளை இப்போது பின்பற்றவில்லை. எனவே, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணையவில்லை. அது வெளிப்படையானதாகவும், இந்திய பொருட்களுக்கு பெரிய சந்தையை திறந்து விடுவதாகவும் இருந்தால், அதில் சேருவது பற்றி இந்தியா பரிசீலிக்கும்.

இவ்வாறு பியூஸ் கோயல் பேசினார்.

அந்த கூட்டத்தில், பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங் களை விற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பியூஸ் கோயல் கூறியதாவது:-

மோசமான நிலையில் உள்ள பொருளாதாரத்தைத்தான் இந்த அரசு பெற்றுள்ளது. பொருளாதாரத்தை மீண்டும் பழைய வடிவத்துக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவெடுத்திருக்காவிட்டால், இவற்றுக்கு நல்ல மதிப்பு கிடைத்து இருக்காது.

நான் மந்திரியாக இல்லாவிட்டால், ஏர் இந்தியாவை வாங்க போட்டி போட்டிருப்பேன். உலகம் முழுவதும் போக்குவரத்து தொடர்புடன், ஏராளமான விமானங்களுடன் உள்ள ஏர் இந்தியாவை தங்க சுரங்க மாகவே நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News