செய்திகள்
சிரியா தாக்குதல்

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 40 வீரர்கள் பலி

Published On 2020-01-24 00:51 GMT   |   Update On 2020-01-24 00:51 GMT
சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 40 ராணுவவீரர்கள் பலியாகினர்.
டமாஸ்கஸ்:

சிரியாவின் இத்லீப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடம் இருந்து மாகாணத்தை மீட்க ர‌ஷிய படையின் உதவியுடன் சிரியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இதுஒருபுறம் இருக்க அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 40 ராணுவவீரர்கள் பலியாகினர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதே சமயம் ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 90 பயங்கரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
Tags:    

Similar News