செய்திகள்
வரைபடம்

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் - சுகாதார ஆணையம்

Published On 2020-01-22 06:41 GMT   |   Update On 2020-01-22 06:41 GMT
சீனாவை அச்சுறுத்திவரும் புதிய கொரோனா வைரஸினால் அமெரிக்காவிலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:

புதிய கொரோனா வைரஸ் சீனாவின் மத்திய நகரமான வுகான் நகரத்திலிருந்து பரவியது. சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிரிழக்க செய்யும் இந்த வைரஸினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா முவதும் 440 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த புதிய வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து மனிதர்களிடமிருந்தே மனிதரிடையே பரவும் என கண்டறியப்பட்டது. சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா,தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சீனாவை அச்சுறுத்திவரும் புதிய கொரோனா வைரஸினால் அமெரிக்காவிலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க சுகதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘வாஷிங்டனின் சீயாட்டில் நகரைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு நபர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறுகிய கால கண்காணிப்புக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நோயின் தாக்கம் கடுமையாக இல்லை. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது’ என வாஷிங்டன் மாநில சுகாதார அதிகாரி கிறிஸ் ஸ்பிட்டர்ஸ் கூறினார்.

Tags:    

Similar News