செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு

Published On 2020-01-19 23:54 GMT   |   Update On 2020-01-19 23:54 GMT
ரூ.8¼ லட்சம் கோடியில் நியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல் சுவர் ஒன்றை கட்டும் யோசனையை ராணுவ என்ஜினீயர்கள் கூறி உள்ளனர்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 119 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி) செலவாகும். கடல் சுவரை கட்டி முடிப்பதற்கு 25 ஆண்டுகள் ஆகும் என அவர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அரிதான புயல்களில் இருந்து நியூயார்க் நகரை காப்பதற்கு 200 பில்லியன் டாலரில் கடல் சுவர் கட்டுவது என்பது அதிக செலவு பிடிக்கிற, முட்டாள்தனமான யோசனை ஆகும். இது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேலைக்கு ஆகாது. இது மிகவும் பயங்கரமான திட்டமாகவும் தெரிகிறது. மன்னிக்கவும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அமெரிக்க நாடாளுமன்றம்தான் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது 
Tags:    

Similar News