செய்திகள்
வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா

சிஏஏ, என்ஆர்சி இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: வங்காளதேச பிரதமர் சொல்கிறார்

Published On 2020-01-19 11:20 GMT   |   Update On 2020-01-19 11:20 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் கருத்து கேட்கபட்டது. அதற்கு ஹசினா குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். என்றாலும், அந்த சட்டங்கள் அவசியம் இல்லாதது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா கூறுகையில் ‘‘இந்திய அரசு இதை ஏன் நடைமுறை படுத்தியது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவைகள் அவசியம் இல்லாதது. தற்போது வரை அது இந்தியாவின் உள் விவகாரம். இந்தியாவில் இருந்து ரிவர்ஸ் இடம் பெயர்வு இல்லை. ஆனால், இந்தியாவில் மக்கள் ஏராளமான பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News