செய்திகள்
நாமல் ராஜபக்சே

ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையும் இல்லை - ராஜபக்சே மகன் அறிவிப்பு

Published On 2020-01-18 08:16 GMT   |   Update On 2020-01-18 08:16 GMT
நானும், எனது தந்தை ராஜபக்சேவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் என்று மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:

கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார்.

அப்போது விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் வருகை தர ரஜினி முடிவு செய்ததாகவும், ஆனால் அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.

அரசியல் நடவடிக்கைக்காக இலங்கை வரும் அவருக்கு விசா வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



ஆனால் இதை இலங்கை முன்னாள் அதிபரும், தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே மறுத்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. மேலும் அதுபற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நானும், எனது தந்தை ராஜபக்சேவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம். எந்த ஒரு தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News