செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபருக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம்: செனட் சபையில் 21-ம் தேதி விசாரணை

Published On 2020-01-16 06:14 GMT   |   Update On 2020-01-16 06:14 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. செனட் சபையில் 21-ம்தேதி விசாரணை தொடங்குகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் போட்டியாளரான ஜோ பிடனை விசாரிக்க, உக்ரைன் மீது அழுத்தம் கொடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்த ஜனநாயக கட்சி, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. 

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளை செனட்டுக்கு அனுப்பவும், குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுக்கவும் இந்திய நேரப்படி நேற்று இரவு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான தீர்மானத்தில் சபாநாயகர் நான்சி பெலோசி கையெழுத்திட்டார்.



இதையடுத்து வரும் 21-ம் தேதி செனட் சபையில் தீர்மானம் மீதான விசாரணை தொடங்க உள்ளது. 

பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் டிரம்புக்கு எதிரான தீர்மானம் எளிதில் நிறைவேறியது. ஆனால், செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சியின் ஆதிக்கம் உள்ளதால், அங்கு இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. 
Tags:    

Similar News