செய்திகள்
பாகிஸ்தானில் பனிப்பொழிவு

பனிப்பொழிவுடன் கனமழை நீடிப்பு- பாகிஸ்தானில் ஒரே நாளில் 26 பேர் பலி

Published On 2020-01-13 15:01 GMT   |   Update On 2020-01-13 15:01 GMT
பாகிஸ்தானில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதுடன், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் பனி படர்ந்ததால், பாரம் தாங்காமல் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்பான விபத்துகளில், ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்தனர். 

குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில் மழை மற்றும் பனிப்பொழிவால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 

பலூசிஸ்தானில் பனிப்பொழிவு மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, நேற்று 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News