செய்திகள்
டிரம்ப்

ஒருபோதும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்காது - டிரம்ப்

Published On 2020-01-10 05:12 GMT   |   Update On 2020-01-10 05:12 GMT
பொருளாதார தடைகளினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டிடம் ஒருபோதும் அணு ஆயுதங்கள் இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் போர்ப் பதற்றங்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளும் தங்களது ராணுவத்தின் முப்படைகளையும் தயார் நிலையிலேயே வைத்துள்ளன. இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

உலகின் வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த இருநாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடைகளினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டிடம் ஒருபோதும் அணு ஆயுதங்கள் இருக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

‘ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது. அவர்கள் அதை புரிந்துகொள்கிறார்கள். அங்கு இப்போது மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. பொருளாதார தடைகளில் சிக்கியுள்ள ஈரான் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக சரிசெய்ய முடியும். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா இல்லையா என்று பார்ப்போம்’ என டிரம்ப் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News