செய்திகள்
டிரம்ப் பேட்டி

ஈரான் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை - டிரம்ப் பேட்டி

Published On 2020-01-08 16:51 GMT   |   Update On 2020-01-08 16:51 GMT
ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கர்வாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

ஈரான் தனது ஆணு ஆயுத கனவை கைவிட வேண்டும். நான் அதிபராக இருக்கும்வரை ஈரான் அணு அயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும்.

உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக ராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News