செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரான் தாக்குதலுக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்த டிரம்ப்

Published On 2020-01-08 07:38 GMT   |   Update On 2020-01-08 07:38 GMT
அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ள நிலையில், தங்களிடம் நவீன ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி உள்ளார்.
வாஷிங்டன்:

ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க விமானப்படை தளங்களை ஈரான் ஏவுகணைகளை வீசி சேதப்படுத்தியது பற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆல் இஸ் வெல். ஈராக்கில் இருக்கும் 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானுக்கு அமெரிக்காவை பற்றி இன்னும் புரியவில்லை. எங்களிடம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களும் உள்ளன. உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்களும் எங்களிடம் இருக்கின்றன. இதை ஈரான் புரிந்து கொள்ள வேண்டும்.


அமெரிக்க விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். நாளை காலை ஒரு அறிக்கை வெளியிட உள்ளேன்.

இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.
Tags:    

Similar News