செய்திகள்
பெட்ரோல்-டீசல்

பெட்ரோல், டீசல் விலை 5 சதவீதம் உயர்ந்தது

Published On 2020-01-08 07:23 GMT   |   Update On 2020-01-08 07:23 GMT
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் கடும் இடையூறு உருவாகி இருக்கிறது.
பாக்தாத்:

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் பரவியதும் வளைகுடா பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. உலகில் கணிசமான அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி வளைகுடா நாடுகளில் தான் செய்யப்படுகிறது. ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் கடும் இடையூறு உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 70 டாலரை தாண்டி உள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை சராசரியாக 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அதிகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News