செய்திகள்
அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன்

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு இல்லை: அமெரிக்கா

Published On 2019-12-17 02:14 GMT   |   Update On 2019-12-17 02:14 GMT
வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு இல்லை என்று அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் தெரிவித்துள்ளார்.
சியோல் :

அணுஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என்று வடகொரியா அண்மையில் அதிரடியாக அறிவித்தது. அதுமட்டும் இன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து 2 முறை முக்கிய சோதனைகளை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.

இந்த நிலையில் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கொரிய தீபகற்ப அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான தென்கொரிய சிறப்பு தூதர் லீ டோ ஹூனை சந்தித்து பேசினார். அதன் பிறகு ஸ்டீபன் பீகன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் நமது கடமைகளை செய்வதற்கான நேரம் இது. நாங்கள் பேச்சுவார்த்தைக்காக இங்கே இருக்கிறோம். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். ஒன்றை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். அணு ஆயுத பேச்சுவார்த்தை அமெரிக்கா காலக்கெடு விதிக்கவில்லை. சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலக்கு எங்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News