செய்திகள்
கோப்புப் படம்

நேபாளத்தில் குண்டு வெடிப்பு - 3 பேர் பலி

Published On 2019-12-14 05:51 GMT   |   Update On 2019-12-14 05:51 GMT
நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி உள்பட மூன்று பேர் பலியாகினர்.
காத்மண்டு: 

நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து சுமார் 200 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது தனுசா மாவட்டம். இம்மாவட்டதில்  நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அலறியடித்து ஓடினர்.  

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு யார் காரணம்  என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் இப்பகுதி அருகே நடந்த தாக்குதலில்  3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News