செய்திகள்
வெள்ளைத்தீவு எரிமலை

நியூசிலாந்து வெள்ளைத்தீவில் எரிமலையில் இருந்து 6 உடல்கள் கண்டெடுப்பு

Published On 2019-12-13 17:33 GMT   |   Update On 2019-12-13 17:33 GMT
நியூசிலாந்து நாட்டில் உள்ள வெள்ளைத்தீவில் எரிமலை வெடித்த பகுதியில் இருந்து மேலும் 6 சுற்றுலா பயணிகளின் உடல்களை ரானுவத்தினர் மீட்டுள்ளனர்.
வெலிங்டன்:

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், வெள்ளைத் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) சுற்றுலா பயணிகள் 47 பேர் அங்குள்ள இடங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். 



அப்போது திடீரென எரிமலை வெடித்து சிதறியது. இதில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிலரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், எரிமலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடித்து சிதறலாம் என்ற நிலையில் தங்கள் உயிரை பிணையம் வைத்து ராணுவத்தினர் இன்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் எரிமலை வெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். 

இதன் மூலம் வெள்ளைத்தீவில் எரிமலை 
வெடிப்பில் உயிரிழந்தவர்களில் மொத்தம் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News