செய்திகள்
இணையத்தில் டிரெண்டாகும் உதடுகள்

இணையத்தில் டிரெண்டாகும் பிசாசு உதடுகள்

Published On 2019-12-13 08:30 GMT   |   Update On 2019-12-13 08:30 GMT
இணையத்தில் டிரெண்டாகி வரும் இயற்கைக்கு மாறான பிசாசு உதடுகள் உண்மையானதா என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.
மாஸ்கோ:

உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக எந்தவொரு சிறு செயலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகின்றன. நெட்டிசன்களுக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை உலக அளவில் டிரெண்டாக்கி விடுவார்கள். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அவ்வகையில், வித்தியசமான ஒப்பனை முறைகள் மூலம் உதடுகளை இயற்கைக்கு மாறான முறையில் மாற்றி டிரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் இவை உண்மையானது போன்று தோற்றம் அளிப்பது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை ரஷியாவில் இருந்து டிரெண்ட் ஆக தொடங்கியதாக கூறப்படுகிறது. அநேக பெண்கள் வித்தியாசமான ஒப்பனை முறைகளின் மூலம் இந்த ‘பிசாசு உதடுகள்’ அல்லது ஆக்டோபஸ் உதடுகள் உருவாக்க முயல்கிறார்கள்.

உதடுகளினுள் நிரப்பிகளை உட்செலுத்தி உதடுகளில் அலைகள் செல்வது போன்று தோற்றமளிக்கச் செய்கின்றனர். வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் இந்த பதிவிற்கு பலரும் இது மிக ஆபத்தானது என்றும் இயற்கைக்கு மாறானது என்றும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். 



இதுகுறித்து புகழ்பெற்ற அழகு நிலையத்தின் நிறுவனர் கூறுகையில், ‘நான் முதலில் இதை பார்க்கும் போது போட்டோஷாப் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையானது என தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் மோசமான ஒப்பனை முறையாகும். நிரப்பிகள் அல்லது பச்சை (டாட்டூ) குத்துதல் மூலமாகவோ இவ்வாறு செய்கிறார்கள். எதுவாக இருந்தாலும் அதை செய்யாதீர்கள். இது இயற்கைக்கு மாறானது. உங்கள் உதடுகள் முற்றிலும் சிதைந்து விடும். 

தயவுசெய்து அப்பாவியாக இருக்காதீர்கள், இது போன்ற வேடிக்கையான போக்குகளைப் பின்பற்றினால் நீங்கள் அதை எளிதாக மாற்றியமைக்க முடியாது மற்றும் உங்கள் இயற்கையான உதடுகளை திரும்பப் பெற முடியாது’, என தெரிவித்தார்.
Tags:    

Similar News