செய்திகள்
போரிஸ் ஜான்சன்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் பிரிட்டன் - போரிஸ் ஜான்சன் உற்சாகம்

Published On 2019-12-13 05:48 GMT   |   Update On 2019-12-13 05:48 GMT
பிரிட்டனின் பொதுத்தேர்வுகள் முடிவு தொடர்பான கருத்துக்கணிப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததையடுத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் பிரிட்டன் தான் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
லண்டன்: 

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு  தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே  கடும் போட்டி நிலவி வந்தது. கடைசி கட்ட பிரசாரத்தின்போது கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு சற்று  பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.  

பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை நியூஸ் சேனலால் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சி  பெருன்பான்மையை காட்டிலும் 86 இடங்கள் கூடுதலாக வெற்றி பெறும் என்று தெரியவந்தது. 

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்த பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் பிரிட்டன் தான் என  தெரிவித்தார்.  

‘நாடு முழுவதும் வாக்களித்த, தன்னார்வ தொண்டு செய்த, வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்கும் நன்றி. உலகின் மிகப்பெரிய  ஜனநாயகத்தில் நாம் வாழ்கிறோம்’ என போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 

இதற்கிடையே கருத்துக் கணிப்பை உறுதி செய்யும் வகையில் போரிஸ் ஜான்சன் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றி மெஜாரிட்டியை  நெருங்கியது. தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த ஜெரமி கார்பின், தொழிலாளர் கட்சியின்  தலைவர் பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News