செய்திகள்
டைம்ஸ் நாளிதழிலில் கிரேட்டா தன்பெர்க்

டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் அறிவிப்பு

Published On 2019-12-11 16:15 GMT   |   Update On 2019-12-11 16:15 GMT
உலக புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழின் 21019-ம் ஆண்டுக்கான சிறந்த நபராக பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்(16) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலக புகழ்பெற்ற டைம்ஸ் வார இதழ் ஆண்டுதோறும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து வருகிறது.  

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த நபரின் பெயரை டைம்ஸ் நாளிதழ் இன்று வெளியிட்டது. 

இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்(16) என்ற இளம்பெண் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

டைம்ஸ் நாளிதழால் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர் என தேர்ந்தெடுக்கப்பட்ட கிரேட்டா தன்பெர்க் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றார். 

அந்த மாநாட்டில் பேசிய அந்த சிறுமி உலகநாட்டு தலைவர்களை நோக்கி "பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" என ஆக்ரோஷமாக முழங்கினார். 

அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News