செய்திகள்
வெட்டி, சேலையில் அபிஜித் பானர்ஜி தம்பதியர்

வேட்டி, சேலையில் வந்து நோபல் பரிசை பெற்ற அபிஜித் பானர்ஜி தம்பதியர்

Published On 2019-12-11 15:52 GMT   |   Update On 2019-12-11 15:52 GMT
ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்து அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர்.
ஓஸ்லோ:

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 



அதன்படி வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்த பொருளியல் நிபுணர்களான கொல்கத்தா நகரை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் விருது வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஒஸ்லோ-வில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலையில் வந்து நோபல் பரிசை பெற்றுக்கொண்டனர்.
Tags:    

Similar News