செய்திகள்
கார் குண்டு தாக்குதல் (கோப்புப்படம்)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் கார் குண்டு தாக்குதல்

Published On 2019-12-11 07:35 GMT   |   Update On 2019-12-11 07:35 GMT
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.
காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமெரிக்கன் பக்ரம் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதி ஒருவன் காரில் குண்டுகளை நிரப்பி விமான தளம் அருகே வேகமாக வந்தான். காரை கதவில் வேகமாக மோத செய்து வெடிக்க வைத்தான்.

இதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன.

உயிரிழப்புகள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News