செய்திகள்
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கடற்படை தளம்

அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Published On 2019-12-06 14:53 GMT   |   Update On 2019-12-06 14:53 GMT
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பென்சகோலா பகுதியில் அந்நாட்டு கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த கடற்படை தளத்தில் இன்று நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கு பணியில் இருந்து வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றனர். மேலும், வேறு சிலர் கடற்படை தளத்திற்குள் மறைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags:    

Similar News