செய்திகள்
துப்பாக்கி

ஆர்டர் செய்த ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் கொடுப்பதா? -துப்பாக்கியை கையிலெடுத்த இளம்பெண்

Published On 2019-12-06 10:22 GMT   |   Update On 2019-12-06 10:22 GMT
அமெரிக்காவில் மெக்டொனால்டு உணவகத்தில் ஜெல்லிக்கு பதிலாக தக்காளி சாஸ் கொண்டு வந்த ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நியூயார்க்: 

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் பிரபல துரித உணவகமான மெக் டொனால்டின் கிளை உணவகம் செயல்பட்டு  வருகிறது.  

நிகழ்வன்று வழக்கம் போல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக்கொண்டிருந்தனர். அப்போது ஆசியா வெஸ்டெர் (வயது 20)  என்ற இளம்பெண் ஆர்டர் செய்த உணவை அந்நிறுவன ஊழியர் கொண்டு வந்துள்ளார். 

அதில், உணவை தொட்டு சாப்பிடுவதற்கு வெஸ்டெர் ஆர்டர் செய்த ஜெல்லிக்கு பதிலாக தக்காளி சாஸ் (கெட்ச் அப்) கொண்டுவரப்பட்டு  பரிமாறப்பட்டது. இதனால் ஊழியரிடம் வெஸ்டர் விவாதம் செய்துள்ளார். பின்னர் கோபமடைந்த அந்த இளம்பெண் ஊழியரை நோக்கி  துப்பாக்கியை நீட்டியுள்ளார். 

இதையடுத்து அந்த ஊழியர் அலறியடித்து ஓடினார். அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு  செய்து ஆசியா வெஸ்டரை கைது செய்தனர். அவர் துப்பாக்கியை எடுத்து நீட்டிய வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.  

‘ஆசியா வெஸ்டெர் 21 வயதுக்கு உட்பட்டவர் என்றாலும் ஊழியரை நோக்கி அவர் துப்பாக்கியை நீட்டியது சட்டவிரோதமானது’ என  போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News